கூடுதல் வகுப்பறைக் கட்டடம் அமைச்சர் திறந்து வைத்தார்

Published Date: November 11, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை பொன்னகரம் வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 60 இலட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தமிழறிஞர் சாலமன் பாப்பையா பங்களிப்புத் தொகை ரூபாய் 20 இலட்சம், மாநகராட்சி பங்களிப்பு ரூபாய் 40 இலட்சம் என மொத்தம் ரூபாய் 60 இலட்சத்தில் நான்கு புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 2 வகுப்பறைகள் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு, இரண்டு வகுப்பறைகள் நவீன அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் மோகன், பள்ளி தலைமை ஆசிரியர் அய்யர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Media: Dinamani